வடகொரியா பாலிஸ்டிக் ஏவுணைகள் சோதனை

வடகொரியா அண்மையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது “மிகவும் தீவிரமானது” என அமெரிக்கா கூறியுள்ளது.

பெப்ரவரி 26 மற்றும் மார்ச் 4 அன்று மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை சோதனைகள், உளவு வேலைகளுக்கான செயற்கைக்கோளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என, வடகொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த சோதனைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை முழு வீச்சில் செலுத்துவதற்கு முன்பான சோதனை முயற்சியிலானது என, அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சமாக 5,500 கி.மீ. (3,417 மைல்கள்) தொலைவுக்கு செல்லும் இந்த ஏவுகணைகள், அமெரிக்காவை அடையலாம். அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ஏவுகணைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

 

Sat, 03/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை