கிருமி மாதிரிகளை அழிக்க உக்ரைனுக்கு அறிவுறுத்து

உக்ரைனியப் பொதுச் சுகாதார ஆய்வகங்களில் உள்ள அதிக ஆபத்துமிக்க கிருமி மாதிரிகளை அழித்துவிடுமாறு உலக சுகாதார அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது. 

ஒரு விபத்தைப் போல் ஆய்வகத்திலிருந்து கிருமி மாதிரிகள் வெளியே கசிந்தால் பொதுமக்களிடையே நோய் பரவும் ஆபத்து இருப்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.  

உக்ரைனிய ஆய்வகங்கள் ரஷ்யப் படையினரால் தாக்குதலுக்குள்ளாகும் நிலையில் அங்கிருந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் வெளியேறும் ஆபத்து இருப்பதாக உயிர்மருத்துவப் பாதுகாப்பு நிபுணர்கள் குறிப்பிட்டனர். உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஆதரவோடு, மனிதர்களையும் விலங்குகளையும் பாதிக்கக்கூடிய கிருமிகள் பற்றி ஆராயும் ஆய்வகங்கள் உக்ரைனில் செயல்பட்டு வருகின்றன. 

 

Sat, 03/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை