இரவு தபால் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

கொழும்பு − பதுளை இரவு நேர தபால் ரயில் 318 நாட்களுக்குப் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஸ்லீப்பர் பெட்டிகள் மற்றும் அஞ்சல் பெட்டியுடன் ரயில் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் நிறுத்தப்பட்டதால், தபால் சேவைகள் மற்றும் பொதி போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையில், முதல் வகுப்பு பெட்டியில் ஸ்லீப்பர் வசதியை அகற்றி அதற்கு பதிலாக இருக்கைகளை அமைக்க நிர்வாகம் திட்டமிட்டிருந்தாலும், பதுளை- _ கொழும்பு இரவு அஞ்சல் ரயில் ஸ்லீப்பர் பெட்டிகளில் படுக்கை வசதியுடன் மீண்டும் இயக்கப்படுகிறது.

எனினும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம், தலைமன்னார், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கு இரவு நேர தபால் புகையிரதங்களை இயக்குவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை.

 

Tue, 03/22/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை