எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸ் பாதுகாப்பு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நிற்பதால் ஏற்படக்கூடிய கலவரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாய நடவடிக்கைகளுக்காக, எரிபொருளை கொண்டுசெல்லும் நபர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், சுற்றுலா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் அம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் விஷேட சுற்று நிருபமொன்றை வெளியிட்டுள்ளார். எரிபொருள் பெற வரிசையில் நிற்கும் போது, ​​நெரிசல் முடியும் வரை பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

Thu, 03/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை