கல்வியில் தீவிரவாத போதனைகள் ஊக்குவிக்கப்படக் கூடாது

- 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணியிடம் கல்வி அமைச்சு செயலாளர் வலியுறுத்தல்

கல்வியில் அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்குத் தடையாக உள்ள தீவிரவாத போதனைகள் ஊக்குவிக்கப்படக் கூடாது என்று ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் உறுப்பினர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் ஒரே நாடு – ஒரே ஒரே சட்டம் உறுப்பினர்கள் கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்த போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கலாசார நிதியத்தின் நோக்கங்களுக்குப் புறம்பாக கடந்த அரசாங்கத்தில் அந்த நிதியத்தின் பணத்தை பயன்படுத்தியதன் காரணமாக கலாசார நிதியத்தின் அடிப்படைப் பணிகளுக்கு தற்போது நிதி இல்லை என தேசிய மரபுரிமைகள், அரங்கு கலை மற்றும் கிராமிய சிற்பக் கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Fri, 03/18/2022 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை