எரிவாயு விநியோகம் இன்று முதல் வழமைக்கு

எரிவாயுவை தாங்கி வந்துள்ள கப்பல்களுக்கான கொடுப்பனவுகள் நேற்று முன்தினம் மாலை செலுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் எரிவாயு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

3,500 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவை கெரவலப்பிட்டியில் தரையிறக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்த ஓமான் நிறுவனத்திற்கு செலுத்தப்பட வேண்டிய 8 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ள போதிலும், எரிவாயுவினை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கடனுக்கான காலம் நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் 6 மில்லியன் அமெரிக்க டொலர் இன்றைய தினத்திற்குள் செலுத்தப்பட வேண்டும் என குறித்த நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 12 நாட்களாக இந்தக் கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

இந்நிலைமையினால் இரண்டு எரிவாயுக் கலன்களில் இருந்தும் எரிவாயுவை இறக்கும் பணி தாமதமானதோடு இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் அவை இறக்கப்படுவதாக அறிய வருகிறது. இந்த நெருக்கடி நிலையால் லிட்ரோ நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியிருந்தது.இந்த நிலையில் இன்று முதல் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Fri, 03/18/2022 - 08:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை