கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு என்பது பொய்

பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கிறது

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லையென பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்கள் கொள்ளைச் சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சிலர் பொய்யான பிரசாரங்களை பரப்புவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

பல்பொருள் அங்காடிகள் மற்றும் வீடுகளை உடைத்து பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

 

Sat, 03/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை