பாடசாலை பஸ் விபத்து 15 மாணவர்கள் காயம்

வலஸ்முல்லயில் நேற்று சம்பவம்

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதால் அதில் பயணித்தவர்களில் 15 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் வலஸ்முல்ல ஹிங்குவரத்தை, ஹந்துகலவில் நேற்று இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான பஸ்ஸில் 30 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், 6 பயணிகளும் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான 15 மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

 

 

Sat, 03/19/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை