ரஷ்யா–உக்ரைன் இடையிலான உயர்மட்டப் பேச்சுத் தோல்வி

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்த முதல் உயர்நிலைச் சந்திப்பு தோல்வியில் முடிந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து இரண்டு வாரமாகி  விட்ட நிலையில், இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் துருக்கியின் அந்தாலியா நகரில் முதன்முறை சந்தித்துப் பேசினர்.

சர்வதேச இராஜதந்திர கருத்தரங்கையொட்டி, துருக்கி அந்த சமரசப் பேச்சுக்கு ஏற்பாடு செய்திருந்தது. 

ரஷ்யாவா, மேற்கத்திய நாடுகளா யாருடன் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உக்ரைனுக்கு ஏற்பட்டதே மோதலுக்குக் காரணம் என்று மொஸ்கோ கூறியது. 

உக்ரைன் சரணடைய வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. ஆனால் அவ்வாறு நடக்காது என்று உக்ரைனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலெபா கூறினார். 

ரஷ்யாவின் ஆரம்பத் திட்டங்களை முறியடித்ததைச் சுட்டிக்காட்டிய அவர், போரை முடிவுக்குக் கொண்டு வர சமச்சீரான அரசதந்திரத் தீர்வுக்குத் தயாராயிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

Sat, 03/12/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை