இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இ.தொ.காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு

ஜீவன், செந்தில் தொண்டமான் பங்கேற்பு

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவின் பிரதிநிதிகள் நேற்று சந்தித்தனர்.

மலையகத்தில் மேற்கொள்ளப்படும் இந்திய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், மலையகத்துக்கான இந்தியாவின் உதவித் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மலையகத்தில் அமைக்கப்படவிருக்கும் பல்கலைக்கழகத்துக்கு இந்திய அரசின் பங்களிப்பின் அவசியத்தையும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்  வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் இ.தொ.கா பிரதிநிதிகள் கலந்துரையாடினர். இச்சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் கலந்துகொண்டனர். இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் இச்சந்திப்பில்கலந்துகொண்டார்.

 

Wed, 03/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை