க.பொ.த உயர்தர, புலமைப்பரிசில் பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும்

பல்கலை அனுமதிக் காலமும் குறைக்கப்படும்

 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியிட்டு பல்கலைக்கழக அனுமதிக்கான காலத்தை நிச்சயமாக குறைக்க இருப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைபெறுபேறுகள் எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

கொடகம சிறுவர் மற்றும் மகப்பேறு மருத்துவ மனை, ஹோமாகம மற்றும் கொடகம வடக்கு-தெற்கு பெண்கள் அமைப்பு என்பவற்றுக்கு தனது பிறந்தநாளை முன்னிட்டு உபகரணங்கெளை அன்பளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் யதாமினி குணவர்த்தன எம்.பி ஆகியோரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து இந்த உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் விக்கும் கித்சிறி தேவப்பிரிய டி சொய்சாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், யதாமினி குணவர்த்தனவும் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் ஹோமாகம பிரதேச சபை உறுப்பினர் கமல் சந்தன, ஹோமாகம பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் இந்திக்க கட்டுதம்ப, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி ஹரித அலுத்கே மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும் முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு உயர்கல்வி நிறுவனங்களின் ஆதரவை பெற முடியும். மருத்துவம் மற்றும் தாதியர் சேவைகளுக்கு ஒத்துழைப்பாக தன்னார்வ சேவைகள் தொடங்கப்பட வேண்டும்.

“உணவில் இருந்து தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களையாவது எமக்கு உற்பத்தி செய்ய முடியுமாக இருந்தால், வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க முடியும். அதனால்தான், விவசாயிகள் அமைப்புகளுக்கு இயன்ற அளவுஉதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். (பா)

Thu, 03/03/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை