நெல்லியடி வீதியின் இரு மருங்கிலும் மரக்கன்றுகள் நடுகை செய்த பொலிசார்

நெல்லியடி வீதியின் இரு மருங்கிலும் மரக்கன்றுகள் நடுகை செய்த பொலிசார்-Police Tree Planting-Nelliadi-Jaffna

யாழ்ப்பாணம், நெல்லியடி நகரப் பகுதிகளில் பொலிசாரினால் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டன.

நேற்று சனிக்கிழமை (19) காலை நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர தலைமையிலான பொலிசார் இம்மரக் கன்றுகளை நட்டு வைத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைவாக தொடர்ச்சியாக நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நிழல் தரும் மரங்களும் பயன்தரு மரங்களுமாக 75,000 மரக்கன்றுகள் நடப்படும் என பொலிசார் தெரிவித்தனர் .

(நாகர்கோவில் விஷேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்)

Sun, 02/20/2022 - 09:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை