டிரம்பின் புதிய சமூக ஊடகம்: 500 பேர் பயன்படுத்தி சோதிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதிய சமூக ஊடகத்தைச் சுமார் 500 பேர் பயன்படுத்திப் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இருவர் அது குறித்துத் தகவல் அளித்தனர்.

‘ட்ரூத் சோசியல்’ எனும் அந்தத் தளத்தின் ஆரம்பப் பதிப்பு சோதனைக்கு வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் டிரம்ப்புக்கு 88 மில்லியன் ரசிகர்கள் இருந்தனர். சுமார் ஓராண்டுக்கு முன் பேஸ்புக், ட்விட்டர், யுடியுப் ஆகிய தளங்கள் டிரம்ப்பின் கணக்குக்குத் தடை விதித்தன.

அதையடுத்து, டிரம்ப்பின் சொந்த நிறுவனமான டிரம்ப் மீடியா அன்ட் டெக்னோலஜி குழுமம் புதிய சமூக ஊடகச் செயலிக்கான வடிவமைப்பை ஆரம்பித்தது.

மக்கள் தொடர்பில் இருக்கக்கூடிய, சுதந்திரமான அனுபவத்தை புதிய செயலி கொடுக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

ஆனால் அதன் கருத்துச் சுதந்திரக் கொள்கைகள் ஆப்பிள், கூகுள் நிறுவனங்களின் செயலிகள் வரையறுத்திருக்கும் விதிமுறைகளுடன் ஒத்துப்போகுமா என்று தெரியவில்லை என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்.

Sun, 02/20/2022 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை