உள்நாட்டில் கார் தயாரித்து அதில் பயணிப்பதே பெருமை

இறக்குமதியில் பருப்புக்கே முக்கியத்துவம் - பசில்

இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதுடன் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காரில் பயணிப்பது பெருமையானதென நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக

மாநாட்டில், வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். வாகனங்களை இறக்குதி செய்வதற்கு முன்னர் நாட்டுக்குத் தேவையான பருப்பு இறக்குமதி செய்வது முக்கியமானது. நாளை காலைக்குள் பருப்பு கொள்கலன்களை எப்படி கொண்டு வருவது என்று பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாவது எமது நாட்டில் கார் ஒன்றை உருவாக்குவோம்.

வாகனங்களை ஒன்றிணைக்கும் 5 நிறுவனங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது எவ்வளவு பெருமையான விடயம்.1960 களில் எமது நாட்டில் கார் தயாரிக்கப்பட்டது.

இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாய பொருட்கள், டின்மீன், பல்வேறு கைத்தொழில் மூலப் பொருட்கள் தற்பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அயல்நாடுகளில் கடன் பெறுவதை விட எமது சொந்தக் காலில் எழுந்து நிற்க உறுதி பூண வேண்டும். அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.(பா)

 

ஷம்ஸ் பாஹிம்

Fri, 02/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை