கொங்கோ முகாம் மீது தாக்குதல்: 60 பேர் பலி

கொங்கோ நாட்டின் வட கிழக்கில் உள்ள வீடற்றவர்களுக்கான முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 60 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.

இன மோதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் அந்த முகாமுக்குள் கடந்த புதன்கிழமை இரவு துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்தவர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் சிறுவர்கள் மற்றும் பெண்களே அதிகம் கொல்லப்பட்டிருப்பதோடு பலரின் கழுத்து வெட்டப்பட்டிருப்பதாக உள்ளுர் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

“நான் படுக்கையில் இருந்தபோது முதலில் அலறும் சத்தம் கேட்டது. தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. நான் தப்பியோடினோன். தீமூட்டப்படுவதும் மக்கள் உதவி கோட்டு அழுவதையும் நான் கண்டேன்” என்று அந்த முகாமில் இருக்கும் ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரதானமாக லெண்டு விவசாய சமூகம் மற்றும் ஹமா கால்நடை மேய்ப்பாளர்கள் இடையே மோதல் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 02/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை