பேஸ்புக்கில் தினசரி பயனாளர்கள் வீழ்ச்சி

பேஸ்புக் நிறுவனம், அதன் தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா வெர்ஸ் என மாற்றிய பின்னர், 4ஆம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட குறைந்த சந்தாதாரர்களை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஆம் நிதி ஆண்டின் அடுத்தடுத்த இரண்டு கால் ஆண்டுகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 10 இலட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் தினசரி பயனாளர்கள் 193 கோடியாக உள்ளது.

நான்காவது காலாண்டில் 10.3 பில்லியன் அமெரிக்க டொலர் நிகர இலாபத்தை மெடாவர்ஸ் ஈட்டியுள்ள நிலையில், இது கடந்த ஆண்டின் நான்காவது காலாண்டை ஒப்பிடும்போது 8 வீதம் குறைந்துள்ளது. கடந்த புதன்கிழமை நிலவரப்படி மெட்டாவர்ஸின் பங்கு விலை 22 வீதம் குறைந்து 250 டொலராக உள்ளது.

Fri, 02/04/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை