ஜப்பான் எல்லை கட்டுப்பாடு: அடுத்த மாதம் தளர்த்த முடிவு

ஜப்பான், அடுத்த மாதம் முதல் அதன் கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளது.

புதிய நடைமுறையின்கீழ், ஜப்பானுக்குச் செல்வோருக்கான தனிமைப்படுத்திக் கொள்ளும் காலம் ஒரு வாரத்திலிருந்து 3 நாளாகக் குறைக்கப்படும்.

அன்றாடம் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 5,000 ஆக உயர்த்தப்படும்.

ஜப்பானின் எல்லைகளைத் திறக்கும்படி வர்த்தகத் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர். கடந்த மாத ஆரம்பத்தில், நுழைவு அனுமதியை வைத்திருந்த சுமார் 400,000 வெளிநாட்டினர் ஜப்பானுக்குச் செல்லக் காத்திருந்தனர்.

ஜப்பானில் நடப்பிலுள்ள கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள் மூலம் அந்நாட்டு மக்கள் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு ஆதரவளிப்பதால், அவர் எச்சரிக்கையுடன் இருப்பதாக கருதப்படுகிறது.

ஜி-7 நாடுகளின் மத்தியில், ஜப்பானின் எல்லைக் கட்டுப்பாடுகள் மிகக் கடுமையானவை என்று அவர் முன்பு கூறியிருந்தார்.

ஆனால் அந்நாட்டில் ஒமிக்ரோன் திரிபு தொடர்ந்து அதிவேகமாகப் பரவி வருவதால், ஜப்பானிய எல்லைகளை மூடுவது குறித்துப் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Sun, 02/20/2022 - 18:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை