இஸ்ரேல் தாக்குதலில் சிரிய படை வீரர் பலி

சிரிய தலைநகர் டமஸ்கஸுக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஒன்றில் சிரிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

ராடார் மற்றும் விமான எதிர்ப்பு பெட்டரிகள் உட்பட விமானங்களை பயன்படுத்தி நேற்றுக் காலை சிரிய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்று திசையில் இருந்து தரையில் இருந்து தரையை தாக்கும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரியாவின் சானா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சிரிய வான் பாதுகாப்பு முறை மூலம் சில ஏவுகணைகள் வீழ்த்தப்பட்டதாக அது கூறியது.

வடக்கு இஸ்ரேலை நோக்கி விமான எதிர்ப்பு ஏவுகணை ஒன்று வீசப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இஸ்ரேலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Thu, 02/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை