அதிகரிப்பு இன்றேல் நட்டம் அதிகரிக்கும்

மசகு எண்ணெயின் விலை இதே நிலையில் நீடித்தால் டீசல் லீற்றருக்கு 48.30 ரூபா நட்டம் ஏற்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 15.68 ரூபா நட்டமாகுமென அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.  இந்தியன் எண்ணெய் நிறுவனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளதையடுத்து, சிபெட்கோ விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதால், தங்களின் நஷ்டம் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பான நடவடிக்கையாக எரிபொருள் விலை அதிகரிப்பு அத்தியாவசியமானதென அரசாங்கத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் விலை அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாகவும் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

 

Thu, 02/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை