நாட்டின் பல பகுதிகளிலும் 100 மி.மீ. வரை கடும் மழை பெய்யும் வாய்ப்பு

சப்ரகமுவ, மத்திய, ஊவா வடமத்திய, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் 100 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சில பிரதேசங்களில் மாலை அல்லது இரவில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் மேகமூட்டம் நிறைந்த வானிலை தென்படுமென வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, ஆகிய மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்.

 

Mon, 02/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை