இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு உள் வருகை விசாவை வழங்க திட்டம்

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து, விசாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட நிலையில், சுற்றுலாப் பயணிகளை ஊக்கவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் உள் வருகை விசாவை (ON ARRIVAL VISA) பெற்றுக்கொள்ளும் நடைமுறை இதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது இந்தியர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக  ஆணையகத்தின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து, விசாவை பெற்றுக்கொள்ளும் நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த இலங்கை சுற்றுலா மேம்பாட்டு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கொவிட் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்ட நிலையில், சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் உள் வருகை விசாவை (ON ARRIVAL VISA) பெற்றுக்கொள்ளும் நடைமுறை இதற்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது இந்தியர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சபை தலைவர் கிமாலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது.நிலைமை சீராகி வரும் நிலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

Mon, 02/14/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை