SLT-MOBITEL Mobile உடன் Rakuten Viber கைகோர்ப்பு

உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தமது வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு உதவும் வகையில் 'Viber Free' டேட்டா பொதிகளை வழங்க தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குனரான SLT-MOBITEL Mobile உடன் Rakuten Viber கைகோர்த்துள்ளது. இந்தக் கூட்டு முயற்சியினால் வாடிக்கையாளர்கள் Viber பயன்படுத்தும் போது வரையறையற்ற டேட்டாவைப் பயன்படுத்த முடியும் என்பதுடன், பிரபல்யமான டேட்டா பொதிகளில் இவ்வசதி காணப்படுகிறது.

SLT-MOBITEL Mobile இன் முற்கட்டண மற்றும் பிற்கொடுப்பனவு வசதிகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் வரையறையற்ற Viber டேட்டா மூலம் இலவச அழைப்புக்கள், குழு வீடியோ அரட்டைகள், communities, chatbotsபயன்பாடுகள், வேடிக்கையான இதர ஸ்டிக்கர்கள் போன்ற இணையற்ற அம்சங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் Viber குறுஞ்செய்தித் தளத்தைப் பயன்படுத்த முடியும்.

399 ரூபா, 499 ரூபா, 699 ரூபா, 1999 ரூபா ஆகிய பெறுமதிகளில் Anytime திட்டங்களைக் கொண்ட முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பெறுவதற்கு தகுதி பெறுவதுடன், 1290 ரூபா, 1690 ரூபா, 2090 ரூபா மற்றும் 3890 ரூபா வரையிலான Anytime திட்டங்களைக் கொண்ட பிற்கொடுப்பனவு இணைப்பு வசதிகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை அனுபவிக்க முடியும்.

'இன்று சந்தையில் உள்ள தரமான டேட்டா பகேஜ்களுக்கு அப்பாலான மதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நோக்கில் viber உடன் கூட்டாண்மையை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சியடைவதாக SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஷசிக செனரத் தெரிவித்தார்.

'எம்மிடம் பரந்தளவிலான வாடிக்கையாளர் தளம் உள்ளது, அவர்கள் யாராக இருந்தாலும் அல்லது அவர்கள் எங்கிருந்தாலும் சரி தொடர்ந்து இணைந்திருக்க உதவுவதே எங்கள் நோக்கமாகும்' என்று Rakuten Viber ஆசிய பசுபிக்கிற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டேவிட் ரிசே தெரிவித்தார்.

இந்த கூட்டாண்மையானது சிறந்த அனுபவத்தை தொடர்ந்தும் புதிதாக வழங்கும் பிரபல்யம் மிக்க குறுந்தகவல் தளத்தின் மற்றுமொரு முயற்சியாகும். வாடிக்கையாளர்கள் SLT-Mobitel SelfCare app அல்லது DataMart app ஊடாக இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்துக்குச் சென்று அங்கு topping செய்வதன் ஊடாக இந்த வசதியைப் பெறலாம்.

'Viber Free' டேட்டா பகேஜ்கள் தொடர்பான மேலதிக தகவல்களை SLT-Mobiltel இன் இணையத்தளமான https://www.mobitel.lk/freeviber இற்கு விஜயம் செய்வதன் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்.

Rakuten Viber, Rakuten Inc இன் ஒரு பகுதியாகும். ஈ-வர்த்தகம் மற்றும் நிதிச் சேவையில் உலகின் முன்னணியாளராகும். இது FC Barcelona இன் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சனல் என்பதுடன் Golden State Warriors m அதிகாரப்பூர்வ உடனடி செய்தி மற்றும் அழைப்பு பயன்பாட்டுப் பங்காளராகும். மேலதிக தகவல்களைப் பெற lanaShviber.com இன் ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

Fri, 01/07/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை