நேட்டோ-ரஷ்யா பேச்சில் தொடர்ந்தும் பின்னடைவு

அமெரிக்கா மற்றும் நேட்டோ உடன் இந்த வாரம் இடம்பெற்ற பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் ‘வெற்றி அளிக்கவில்லை’ என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா, அடிப்படை விவகாரங்களில் தொடர்ந்து முரண்பாடு நீடிப்பாக தெரிவித்துள்ளது.

ஜெனீவா மற்றும் பிரசல்ஸில் இதுவரை இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதோடு சில சாதகமான நிலை ஏற்பட்டபோதும் மொஸ்கோ ஸ்திரமான முடிவு ஒன்றை எதிர்பார்க்கிறது என்று ரஷ்ய அரச பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடந்த வியாழனன்று தெரிவித்தார்.

மேற்கில் இருந்து ரஷ்யாவின் பாதுகாப்புக் கோரிக்கைகள் மற்றும் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்திருக்கும் நிலையில் ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமைப்பின் சந்திப்பு ஒன்றுக்காக கடந்த வியாழனன்று இந்த பேச்சுவார்த்தைகள் வியன்னாவுக்கு மாற்றப்பட்டது.

ரஷ்யாவின் படைக் குவிப்பை வாபஸ் பெறும்படி உக்ரைன் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் கோருவதோடு ரஷ்யா தாக்குதல் ஒன்றை தொடுத்தால் அதன் மீது பல்வேறு தடைகளை விதிப்பது பற்றி மேற்குலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

உக்ரைனின் கிழக்கில் ஏற்கனவே ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் போராடுவதோடு 2021 இல் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிரிமியான் தீபகற்பத்தை கைப்பற்றிய நிலையில் உக்ரைன் மீது ஆக்கிரமிப்புத் தொடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

தமது எல்லைக்குள் தாம் விரும்புகின்றபடி படைகளை நிலைநிறுத்த முடியும் என்று குறிப்பிடும் ரஷ்ய அதிகாரிகள் நேட்டோ, பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னாள் சோவியட் ஒன்றிய நாடான உக்ரைனை நோட்டோ அமைப்பில் சேர்ப்பதில்லை என்ற சட்டபூர்வ உறுதிப்பாட்டைக் கோரும் ரஷ்யா மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் முன்னாள் சோவியட் ஒன்றிய நாடுகளில் இருந்து படைகளை வாபஸ் பெறும்படியும் கோருகிறது.

Sat, 01/15/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை