சீன இராணுவ ஊடுருவல்; தாய்வான் கடும் எதிர்ப்பு

சீனாவுடனான வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு தாய்வான் ஜனாதிபதி ட்சாய் இங் வென் தனது புத்தாண்டு உரையில் அழைப்பு விடுத்தார். சீனா தனது இராணுவ சாகசங்களை விரிவுடுத்துவதை கட்டுப்படுத்தும்படியும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் இராணுவ ஊடுருவல்களுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ட்சாய் அது பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்காது என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை தொடர்வது ஒரு குற்றமில்லை என்றும் ஹொங்கொங் தொடர்பான தமது ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறியதாக என்.எச்.கே செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

2021இல் தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 950 சீனா விமானப்படை விமானங்களின் ஊடுருவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Tue, 01/04/2022 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை