பிக்அப்புக்களுக்கான அசல் உபகரண டயராக CEAT ரேடியல் டயர் அறிமுகம்

உள்நாட்டில் பொருத்தி தயாரிக்கப்படும் மஹிந்திரா போலேரோ சிட்டி பிக்அப்புக்களுக்கான அசல் உபகரண டயராக CEAT ரேடியல் டயர் அறிவிக்கப்பட்டுள்ளது

CEAT களனி ஹோல்டிங்க்ஸ் இலங்கையில் போலேரோ சிட்டி பிக்அப்புக்களுக்கான அசல் உபகரணங்களை தயாரிப்பவர்களுக்கான நியமனத்தை பெற்று அதன் உள்நாட்டு ரேடியல் டயர் உற்பத்தியில் இன்னுமொரு மைல்கல்லை அடைந்துள்ளது.

இந்த போலேரோ சிட்டி பிக்அப் வாகனங்கள் மஹிந்திரா ரூமஹிந்திரா இந்தியா நிறுவனம் மற்றும் ஐடியல் மோட்டர்சின் கூட்டுச் சேர்க்கையின் மூலம் இலங்கையில் பொருத்தி தயாரிக்கப்படுகின்றன.

இரு நிறுவனங்களுக்கிடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் மத்துகம,வெலிப்பென்னையிலுள்ள மஹிந்திரா ஐடியல் லங்கா ஓட்டமொட்டிவ் பொருத்துமையத்தில் பொருத்தித் தயாரிக்கப்பட்டு பாவனைக்கு வரும் அனைத்து மஹிந்திரா போலேரசிட்பிக்அப்புக்களுக்கும் களனியிலுள் களனிடயர் தொழிற்சாளையில் தயாரிக்கப்படும் டயர்களே பொருத்தப்படும்.

CEAT களனி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரவி டட்லானி இந்த உடன்படிக்கைபற்றிக் குறிப்பிடும்போது’மஹிந்திராமற்றும் ஐடியல் மோட்டர்ஸ் கூட்டுருவாக்கத்தின் உள்ளுர் பெறுமதிசேர்ப்பின் முயற்சிக்கு பங்களிப்பதில் மகிழ்ச்சியடைவதோடு,எம்மால் செய்யமுடியுமானதில் மிகச் சிறந்ததான - உள்நாட்டு தன்மைகளுக்கு ஏற்றதாக வடிமைக்கப்பட்டு,நுட்பமாக உருவாக்கப்பட்ட உயர்தரமான டயர்களை உற்பத்திசெய்வதன் மூலம்,வெளிநாட்டுச் செலாவணியைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவையும் நல்குகிறோம்.

வரையறுக்கப்பட்ட மஹிந்திரா ஐடியல் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் வெல்கம ’இந்தப் புதிய முன்னெடுப்பு சரியான திசையில் எடுத்துவைக்கப்பட்ட ஒரு எட்டாக அமைவதோடு,சந்தைப் பொருளாதாரத்தில் இருந்து தயாரிப்பை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை நோக்கிய இலங்கை அரசாங்கத்தின் நகர்வான அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பை ஆதரிப்பதாகவும் அமையும்,”எனக் குறிப்பிட்டார். இலங்கையிலே இந்தநிறுவனத்தின் செயற்பாடுகள்,காற்றடைக்கும் ரேடியல் டயர்கள் (பயணகார்கள்,வான்கள் மற்றும் வர்த்தகரீதியான (நைலோன் மற்றும் ரேடியல்,மோட்டார் சைக்கிள்,முச்சக்கரவண்டிகள் மற்றும் விவசாயவாகனப் பிரிவுடயர்களையும் உள்ளடக்கியுள்ளது.

Wed, 01/05/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை