சீனித் தொழிற்சாலைகளை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றியது கோட்டாபய அரசாங்கமே

- அமைச்சர் ஜானக வக்கும்புர

நாட்டின் சீனித் தொழிற்சாலைகள் இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்பட்டு வருகிறது என ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜானக வக்கும்புர தெரிவித்தார்.

எம்பிலிப்பிட்டியவில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக நட்டத்தில் இயங்கி வந்த சீனித் தொழிற்சாலைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலேயே இந்த இலாபமீட்டும் நிலையை அடைய முடிந்தது. சிறந்த நிர்வாகத்தில் இவை வழிநடத்திச் செல்லப்படுவதால் இவை இலாபத்தில் இயங்குகின்றன.

இந்நிறுவனங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் தொழிலாளர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் அவ்வாறு செய்வதால் தொழிலாளர்கள் ஊழியர்கள் மன மகிழ்ச்சியுடன் சேவை செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Wed, 01/12/2022 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை