கடந்த வருடத்தில் மட்டும் யானை தாக்கி 127 பேர் பலி; 360 யானைகள் உயிரிழப்பு

காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு இலக்காகி கடந்த வருடம் 127பேர் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

அத்தோடு, கடந்தாண்டு 360யானைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.  

புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்துகள் உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறு யானைகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

எவ்வாறாயினும், 50சதவீதமான யானைகளின் மரணங்கள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாகவே நிகழ்ந்துள்ளன.  

அதன்படி, சுமார் 200 யானைகள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக மரணித்ததாகத் தெரியவந்துள்ளது.  

Wed, 01/12/2022 - 08:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை