உகண்டா: யானை மிதித்து சவுதி சுற்றுலாப்பயணி பலி

உகாண்டாவிலுள்ள பிரபல பூங்கா ஒன்றில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் யானையால் மிதித்துக் கொல்லப்பட்டுள்ளார். 

கடந்த ஜனவரி 25 ஆம் திகதி முர்சிசோன் போல்ஸ் தேசியப் பூங்காவில் சம்பவம் நடந்துள்ளது.

சுற்றுலாப் பயணியான அய்மன் சையத் எல்ஷாஹானி தனது நண்பர்களுடன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஓரிடத்தில் நிறுத்தி வெளியேறினார். அப்போது அவரை நோக்கி ஓடிய யானை சம்பவ இடத்திலேயே எல்ஷாஹானியைக் கொன்றது. 

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கப் பாதுகாப்பு விதிமுறைகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர். 

எல்ஷாஹானியின் மரணம் பற்றி பொலிஸார் விசாரணை நடத்துவார்கள் என்றும் அவர்கள் கூறினர். 

கிழக்காப்பிரிக்க நாட்டில் முன்னரும் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. 

Sun, 01/30/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை