பகிரங்க மன்னிப்பு கோரிய வர்த்தகர்!

“பெருந்தோட்ட மக்களின் கல்வி நிலைமை, பொருளாதார நிலைமை , அறிவுத் திறன் ஆகியன மிகவும் குறைந்த மட்டத்தில் இருப்பதாக” தெரிவித்து, ஹற்றன், டிக்கோயா நகரிலுள்ள வியாபாரியொருவர் அவரின் பேஸ் புக்கில் கருத்து வெளியிட்டிருந்தார். அவரின் அந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 04ஆம் திகதி டிக்கோயா நகரில் வர்த்தக நிலையங்களை பூட்டி வியாபாரிகள் மற்றும் மக்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தையடுத்து குறித்த வியாபாரி தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளவதாகவும், சகல பெருந்தோட்ட மக்களிடமும் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்து அவர் சகலரின் மத்தியிலும் வணங்கி மன்னிப்புக்கோரினார்.

 

 

Fri, 01/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை