சுகாதாரத்துறை தொடர்பான புகார்கள், ஆலோசனைகள்

1907 எனும் அவசர இலக்கம் அறிமுகம்

சுகாதாரத் துறை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் பதிவு செய்ய 1907 அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உலக வங்கியின் உதவியுடன் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சுவ சவன’ என்ற திட்டம் இன்று முதல் செயற்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் சுகாதார அபிவிருத்தி பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் 0707 907 907 என்ற எண்ணில் வாட்ஸ்அப் அல்லது வைபர் செயலி மூலம் புகார்கள் அல்லது ஆலோசனைகளை பதிவு செய்யலாம் என்றார்.

 

Fri, 01/07/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை