முதலீட்டுச் சபைக்கு புதிய பணிப்பாளர்கள்

ஜனாதிபதியினால் நியமிப்பு

இலங்கை முதலீட்டுச் சபைக்கான புதிய பணப்பாளர் சபை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய பணிப்பாளர் சபைக்கு மைக்ரோ ஹோல்டிங்கஸ் தனியார் நிறுவனத்தின் தலைவரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி லோரன்ஸ் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி குஷான் டீ அல்விஸ், தந்திரி ட்ரோலர்ஸ் தனியார் நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் அதுல ஹபுதந்திரி மற்றும் சர்வதேச முதலீட்டு வங்கியாளர் ஜயமின் பெல்பொல ஆகியோர் இந்த பணிப்பாளர்

சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய பணிப்பாளர் சபை விமான போக்குவரத்து மற்றும் முதலீட்டு வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ராஜா எதிரிசூரிய ஆகியோரை இலங்கை முதலீட்டு சபையில் வைத்து சந்தித்துள்ளனர்.

Fri, 01/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை