மேலும் இரண்டு இலட்சம் சீமெந்து மூடைகள் இன்று இலங்கைக்கு

சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு

இலங்கைக்கு 2 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்றைய தினம் வந்தடையவுள்ளதாக, சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

6 இலட்சம் சீமெந்து மூடைகளைத் தாங்கிய இரண்டு கப்பல்கள் கடந்த வாரம் நாட்டை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும், சந்தையில் அதிகரித்துள்ள கேள்வி காரணமாக, சில பகுதிகளில் சீமெந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை, துறைமுக நகர் மற்றும் நகர வீடமைப்புத் திட்ட நிர்மாணம் உள்ளிட்ட ஏனைய தனியார்த் துறை கட்டுமானப் பணிகளுக்காக அதிக கேள்வி உள்ளதாக சீமெந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

Fri, 01/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை