பைஸர் தடுப்பூசி அமெரிக்காவினால் மேலும் 500 மில்.

இம்மாதம் முதல் மேலும் 500 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளை குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா ஏற்கனவே உலகளாவிய ரீதியில் 112 நாடுகளுக்கு 400 மில்லியன் தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியுள்ளது.

இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் முன்பு அறிவித்திருந்தது.

அதற்கமைய, தற்போது உலகளாவிய ரீதியில் மேலும் 500 மில்லியன் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fri, 01/28/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை