ஐரோப்பாவில் பாதிப்பேருக்கு கொரோனா தொற்ற வாய்ப்பு

ஐரோப்பாவில் அடுத்த இரண்டு மாதங்களில் பாதிக்கும் அதிகமானோரை ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் திரிபு தொற்றலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

வைரஸ் தொற்று நிலவரம் நீடித்தால் அத்தகைய சூழல் ஏற்படலாம் என்று கூறப்பட்டது. 26 ஐரோப்பிய நாடுகளில் வாரந்தோறும் மக்கள் தொகையில் ஒரு வீதத்தினருக்கு புதிதாக வைரஸ் தொற்று பதிவாவதாக அண்மைய தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாண்டின் முதல் வாரத்திலேயே ஐரோப்பாவில் 7 மில்லியனுக்கும் அதிகமான வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒமிக்ரோன் திரிபு மேலும் விரைவாகத் தொற்றக்கூடியது என்றும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர் என்றும் தகவல்கள் புலப்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறினர்.

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை