மீண்டும் காணப்படும் மண்ணெண்ணெய் வண்டிகள்

கொழும்பின் சில பகுதிகளில் மண்ணெண்ணெய் வண்டிகளை வைத்திருந்தவர்கள் மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனையை தங்களது வண்டிகளூடாக ஆரம்பித்துள்ளனர். நாட்டில் தற்போது எரிவாயு கிடைக்காத காரணமாக பெரும்பாலானவர்கள் மண்ணெண்ணெய் அடுப்பை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது மண்ணெண்ணெய்க்கு கடும் கிராக்கி நிலவி வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல், டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் வாங்க மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருக்கிறது. வரிசையில் காத்திருந்து வாங்குவதை விட வீட்டுக்கருகில் வரும் மண்ணெண்ணெய் வண்டியிலிருந்து மண்ணெண்ணெய் வாங்குவது இலகுவானது என்பதால், கொழும்பில் மண்ணெண்ணெய் வியாபாரம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை