பிரிட்டிஷ் பிரதமருக்கு நெருக்கடி

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முதன்முறை முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோது ஓர் ஒன்றுகூடலில் அவர் கலந்துகொண்டது அதற்குக் காரணமாகும்.

பிரதமரின் இல்லமும் வேலையிடமும் அமைந்துள்ள தோட்டத்தில் 100க்கும் அதிகமானோர் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளுமாறு 2020 மே மாதம் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் வெளியே கசிந்துள்ளது.

அப்போது இங்கிலாந்தில் நடப்பிலிருந்த கட்டுப்பாட்டின்படி வெளியிடங்களில் இருவருக்கு மேல் சந்தித்துப்பேச அனுமதியில்லை.

தற்போது கிடைத்துள்ள சான்றுகள், விதி மீறலில் சம்பந்தப்பட்டோர் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வழியமைக்கும் என்று நம்புவதாக லண்டன் மேயர் சாதிக் கான் கூறினார்.

Thu, 01/13/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை