மின்சார துண்டிப்புக்கு தீர்வாக இந்தியாவிலிருந்து எரிபொருள்

நடவடிக்கை முன்னெடுப்பு என்கிறார் காமினி லொக்குகே

 

மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு வினவிய போது அதற்குப் பதிலளித்த அவர், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் இருந்தாவது எதிர்வரும் நாட்களுக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவர்களுடன் கலந்து ரையாடல்களை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்துள்ளார்.

Tue, 01/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை