எரிமலை வெடிப்பு: டொங்கா அவசர உதவிக்கு அழைப்பு

கடந்த சனிக்கிழமை கடலுக்கடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை அடுத்து ஏற்பட்ட பாதிப்புகள் மதிப்பிடப்பட்டு வரும் நிலையில் பசிபிக் தீவு நாடான டொங்கா குடிநீர் மற்றும் உணவு உட்பட அவசர உதவிகளை கோரியுள்ளது.

1991 இல் பிலிப்பைன்ஸின் பினடுபோவில் இடம்பெற்ற பூகம்பத்திற்கு பின்னர் பதிவான சக்திவாய்ந்த பூகம்பம் இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சுனாமி அலை ஏற்பட்டதோடு டொங்கா நாட்டில் எரிமலை சாம்பல் படர்ந்துள்ளது.

“தொடர்பாடல்கள் தொடர்ந்து துண்டிக்கப்பட்டிருப்பதோடு, தற்போது உயிர்கள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்டிருக்கும் முழு அளவிலான பாதிப்புகள் தெரியாதுள்ளது. டொங்கா மக்களுக்கு சுத்தமான நீர் மற்றும் உணவை வழங்குவதற்கான அவசர உதவிகள் தேவை என்பது மாத்திரமே இப்போது எமக்குத் தெரிந்த ஒரே விடயமாக உள்ளது” என்று பாராளுமன்ற சபாநாயகர் லோர்ட் பகாபனூவா சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடலுக்கடியில் இருக்கும் ஹுங்கா டொங்கா ஹுங்கா - ஹாபாய் எரிமலையில் மற்றொரு வெடிப்பு நிகழ்ந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

டொங்கா எரிமை பகுதியில் பெரிய அலைகள் தோன்றியதை அவதானிக்க முடிந்ததாகக் கடந்த ஞாயிறன்று குறிப்பிட்டிருக்கும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இது மற்றொரு வெடிப்பு நிகழ்ந்திருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க அலையை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஏற்படவில்லை என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

டொங்காவில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பதிப்பீடு செய்ய அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நேற்று கண்காணிப்பு விமானங்களை அனுப்பியுள்ளன. மனிதாபிமான பணிகள் தொடர்பில் அந்த நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளுடன் ஒருங்கிணைப்புடன் செயற்படுகின்றன.

Tue, 01/18/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை