ஜனவரியில் சம்பள அதிகரிப்பு இல்லையெனில் போராட்டம்

ஆசிரியர், அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் எச்சரிக்கை

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர்,அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இவ்வாறு தொடர் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. சம்பள பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சுற்றுநிருபம் இதுவரை வெளியிடப்படவில்லையென இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். எனவே, குறித்த சுற்றுநிருபம் எதிர்வரும் 5ஆம் திகதிக்குள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

Sat, 01/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை