10 பில். டொலர்களை கடனாக வழங்க வேண்டும்

இலங்கைக்கு இந்தியா 10 பில்லியன் டொலர்களை கடனாக வழங்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் இந்தியா தனக்கு நீண்ட கால சகா ஒருவர் தேவை என கருதினால் இந்தியா  தற்போது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் அமெரிக்க டொலர்களை (ஒத்திவைக்கப்பட்ட வட்டி) கடனாக வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர், அல்லது சீனாவிற்கு இளைய சகா ஒருவர் கிடைக்கும் நிலையை எதிர்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் பல வெளிவிவகார கொள்கைகளில் தோல்வியடைந்துள்ளது, இலங்கை இன்னொன்றாக இருக்கவேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Sat, 01/01/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை