உலகில் கொரோனா கட்டுப்பாடு அதிகரிப்பு

ஒமிக்ரோன் திரிபுடன் தொடர்புபட்டு உலகெங்கும் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் பல அரசுகள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன.

மகாவோ அனைத்து சர்வதேச விமானங்களுக்கும் தடை விதித்திருப்பதோடு, ஜப்பானில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளத்தில் கொரோனா கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மறுபுறும் தடுப்பூசி பெறாத உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான செர்பியாவின் நொவக் ட்ஜோவிக்கை நாட்டுக்குள் நுழைய அவுஸ்திரேலியா அனுமதி மறுத்துள்ளது.

ஒமிக்ரோன் திரிபினால் இந்தியாவில் நேற்று முதல் மரணம் பதிவாகி உள்ளது. மேற்கு மாநிலமான ராஜஸ்தானைச் சேர்ந்த 74 வயது ஆடவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

Fri, 01/07/2022 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை