கசகஸ்தான் பதற்றம்: ரஷ்யா தலைமை துருப்புகள் விரைவு

கசகஸ்தானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் கடுமையாக முடக்கப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதியின் கோரிக்கையை அடுத்து ரஷ்யா தலைமையிலான படையினர் கசகஸ்தனை வந்தடைந்துள்ளனர்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடந்த சில நட்களாக இடம்பெற்று வரும் ஆர்ப்பட்டங்கள் மற்றும் பதற்ற சூழலில் பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டது தொடர்பில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவும் மிகப்பெரிய நகரான அல்மட்டியில் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்து தரப்புகளும் வன்முறைகளை நிறுத்தும்படி ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளன.

ஆயுதமேந்திய குற்றவாளிகள் என்று வர்ணிக்கப்பட்ட 26 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக கசக் உள்துறை அமைச்சு நேற்று தெரிவித்தது. இதில் மேலும் 3,000க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வன்முறைகளில் 18 பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டிருப்பதோடு 748 பேர் காயமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளே இந்த பதற்றத்திற்கு காரணம் என்று ஜனாதிபதி காசிம் ஜொமார்ட் டொகாயேவ் குற்றம்சாட்டியபோதும் அதற்கான ஆதாரம் எதனையும் அவர் வெளியிடவில்லை.

இந்நிலையில் சுமார் 2,500 வெளிநாட்டு படையினர் கசகஸ்தான் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பினாலேயே இந்தத் துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் படையினர் அமைதிகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் என்றும் அரச மற்றும் இராணுவ நிலைகளை பாதுகாக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த படையினர் பல நாட்கள் அல்லது வாரங்கள் அந்நாட்டில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கசகஸ்தான் வடக்கில் ரஷ்யா மற்றும் கிழக்கில் சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்துள்ளது. இது மேற்கு ஐரோப்பா அளவிலான ஒரு பெரிய நாடு, மத்திய ஆசியாவில் உள்ள பிற முன்னாள் சோவியத் குடியரசுகளின் நிலப்பரப்பில் இது சிறியது.

எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிரான கலவரங்கள் அரசாங்கத்தை உலுக்கியுள்ளன. இதன் விளைவாக உயர்மட்டத்தில் உள்ளவர்களின் இராஜிநாமாக்களை எதிர்ப்பாளர்கள் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால் அவர்களை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Sat, 01/08/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை