பாகிஸ்தான் பனிப்புயலில் 22 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் கடும் பனிப்புயலில் சிக்கிய வாகனங்களில் இருந்த குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

பனி மழை பொழிவதை பார்க்க மலையுச்சி நகரான முரீயை நோக்கி அதிக சுற்றுலா பயணிகள் விரைந்த நிலையில் சுமார் 1,000 வாகனங்கள் பனிப்புயலில் சிக்கியுள்ளன.

பொலிஸ் அதிகாரி, அவரது மனைவி, ஆறு குழந்தைகள், அதேபோன்று ஐந்து பேர் கொண்ட மற்றொரு குடும்பமும் உயிரிழந்தவர்களில் உள்ளனர்.

300க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 1.2 மீற்றருக்கும் அதிகமான அளவில் பனி கொட்டியது. தட்பவெப்பநிலை உறைநிலைக்குக்கீழ் 8 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.

Mon, 01/10/2022 - 07:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை