கின்னஸ் சாதனை மாணவனுக்கு பாராட்டு

அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட “WISDOM”திறந்த வகுப்பறை கட்டட தொகுதியின் முதற்கட்டம் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

மேலும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் மாணவன் லவனிஷ் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபரும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவருமான ஸ்ரீதர், அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபரும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் வதிவிட முகாமையாளருமான விஜேயசிங், அட்டன் வலயக்கல்வி பணிமனையின் கோட்டக் கல்வி பணிப்பாளரும் கல்லூரியின் பழைய மாணவியுமான லட்சுமி பிரபா செல்வேந்திரன், கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொது செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

 

தலவாக்கலை குறூப் நிருபர்

Mon, 01/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை