ரொஹிங்கிய முகாமில் தீ: 1,200 வீடுகள் சேதம்

பங்களாதேஷில் ரொஹிங்கியா அகதிகள் முகாமின் ஒரு பகுதியில் தீ ஏற்பட்டதைத் தொடர்ந்து 5,000க்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.

அதில் சுமார் 1,200 வீடுகள் சேதமடைந்ததாக முகாமின் பாதுகாப்பிற்குத் தலைமை வகிக்கும் பொலிஸ் படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மூங்கில், தார் பூசிய கித்தான் துணி போன்றவற்றால் அமைக்கப்பட்ட முகாமின் பகுதிகளில் தீ மிக விரைவில் பரவியதாகவும் கூறப்பட்டது. இருப்பினும் சுமார் 2 மணி நேரத்துக்குள் முகாமில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கொக்ஸ் பசார் வட்டாரத்தில் உள்ள அந்த அகதிகள் முகாமில், மியன்மாரில் இருந்து தப்பிச் சென்ற சுமார் 850,000 முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.

Tue, 01/11/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை