பணியாற்ற உகந்த பணியிடங்கள் விருதுகளை வென்ற DIMO

இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, சமீபத்தில் நடைபெற்ற Great Place to Work (GPTW) விருது வழங்கும் விழா 2021 இல், தொடர்ந்து 9ஆவது ஆண்டாக பணியாற்றுவதற்கான சிறந்த இடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஆவது முறையாக ‘Asia’s Best Workplace 2021’ (ஆசியாவின் சிறந்த பணியிடம்) பட்டத்தையும் வென்றுள்ளது. அத்துடன், நிறுவனத்தின் சிறந்த மக்கள் நடைமுறைகளுக்கான விருதுகளான, திறமை ஈர்ப்பு, உள்வாங்குதல் அடிப்படையில் மக்கள் முன்முயற்சிகளில் சிறந்து விளங்குதல் விருது மற்றும் உள்ளடக்கிய கலாசார அடிப்படையில் மக்கள் முன்முயற்சிகளில் சிறந்து விளங்குதல் விருது, ஆகிய இரண்டு வகை விருதுகளையும் DIMO பெற்றது.

DIMO ஆனது அதன் பல்வேறுபட்ட பணியாளர்களுக்கும் 'வேலையை இன்பமாக்குதல் மற்றும் வெகுமதி அளிப்பது' எனும் அதன் பணியாளர் மதிப்பு முன்மொழிவை உண்மைப்படுத்தியுள்ளதுடன், ஒரு வியக்கத்தக்க தொழில் வழங்குனராக அதன் பல்லாண்டு கால அங்கீகாரத்தைத் தக்கவைத்துள்ளது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1,800 இற்கும் மேற்பட்ட அதன் ஊழியர்களின் திறமையைக் கடந்து, ஒவ்வொரு குழு உறுப்பினரின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சியை அவர்கள் கொண்டுள்ள விசேடத்துவ பகுதியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவர்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் தனித்துவமான திறன்களை DIMO உறுதியாகப் புரிந்துகொள்கிறது. நல்ல திறமைகளுக்கு திரையிடுவதற்கான வாய்ப்புகளைத் தவிர, மாற்றத்திற்கு பதிலளிக்கும் திறனுடன் தலைமைத்துவத் திறன்களுடன் சான்றளிக்கப்படுகிறார்கள்.

Tue, 01/11/2022 - 06:00


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை