கிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள்

கிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள்-Kilinochchi Woman Lead Family

கிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு ஒன்று விழுது அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி கிளிநொச்சியில், விழுது அமைப்பின் ஏற்பாட்டில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமைதங்கும் பெண்கள் என்ற தொனிப்பொருளில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் விழுதுகள் அமைப்பைச் சேர்ந்த மோகனதாஸ் ஷர்மிளா தலைமையில் இந்நிகழ்பு நடைபெற்றது.

கிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள்-Kilinochchi Woman Lead Family

இந்நிகழ்வில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபான உற்பத்தி விற்பனை என்பனவற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு சமுகத்தின் தேவை தெடர்பிலும் சமுக சேவைகள் மற்றும் பெண் தெழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தல், சிறுவர் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கருத்துகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மாவட்ட மது வரி அத்தியட்சகர் சமுக சேவைகள் உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் விஞ்ஞான தொழில்நுட்ப உத்தியோகத்தர் என பலர் வளவாளர்களாக கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை வழங்கினர்.

கிளிநொச்சியில் மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள்-Kilinochchi Woman Lead Family

மேற்படி கருத்தமர்வில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அமரா பெண்கள் சமாசம், மாவட்ட பெண்கள் அமைப்புக்கள், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த விழுது மையத்தின் உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பரந்தன் குறூப்நிருபர்)

Sun, 12/12/2021 - 11:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை