தடுப்பு மருந்துகளை பதுக்க வேண்டாம்

தடுப்பு மருந்துகளைப் பதுக்கி வைக்க வேண்டாம் என்று உலக நாடுகளிடம் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு செய்வது வைரஸ் தொற்றுச் சூழலை இன்னும் அதிக காலத்திற்கு நீட்டிக்கும் என்று அந்த அமைப்பு எச்சரித்தது.

செழிப்புமிக்க நாடுகள் தங்கள் மக்களைப் பாதுகாக்க தடுப்பு மருந்துகளை அதிக அளவில் சேகரித்து வைக்கும் அபாயம் இருப்பதாக அமைப்பு கூறியது. அதனால் தடுப்பு மருந்துகளைப் பெற ஏழை நாடுகள் சிரமப்படலாம் என்று அது குறிப்பிட்டது.

ஆபிரிக்கக் கண்டத்தில் ஓமிக்ரோன் வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அமைப்பு கூறியது.

ஆனால் கடந்த ஒரு வாரத்தில் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை ஒரு மடங்கு அதிகரித்து 100,000க்கும் மேல் பதிவானதாக அது தெரிவித்தது.

 

Sun, 12/12/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை