ஜோர்தான் பாராளுமன்றில் கைகலப்பு

ஜோர்தான் பாராளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு இடையேயான வாக்குவாதம் கைகலப்பாக மாறி, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் அம்மானில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில், அரசியலமைப்பில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மீதான விவாதத்தின் போது தேவையற்ற கருத்துக்களுக்காக உறுப்பினர் மன்னிப்பு கேட்க மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டதால் அவையில் பதற்றம் நிலவியது.

இந்த பாராளுமன்ற அமர்வு தொலைகாட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட நிலையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய எம்.பி கலீல் அத்தியே, இந்த நடத்தை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் நாட்டின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோர்தானிய அரசியலமைப்பு 1952 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டதோடு, 29 தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனினும் அங்கு மன்னரிடமே அதிக அதிகாரங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 12/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை