சீனாவில் 4ஆவது நாளாக நோய்த் தொற்று அதிகரிப்பு

சீனாவில் உள்நாட்டில் பதிவான கொரோனா தொற்று சம்பவங்கள் கடந்த திங்கட்கிழமை தொடர்ச்சியாக நான்காவது நாளாக அதிகரித்துள்ளது. ஷியான் நகரில் மேலும் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வரும் நிலையில் அங்கு தொடர்ந்து முடக்க நிலை அமுலில் உள்ளது.

ஷியானில் புதிதாக 175 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு இது முந்திய தினத்தில் பதிவான 150 சம்பவங்களில் அதிகரிப்பை காட்டுவதாக நேற்றைய உத்தியோகபூர்வ தரவுகள் காட்டுகின்றன.

கடந்த டிசம்பர் 9 தொடக்கம் திங்கட்கிழமை வரை ஷியானில் 810 தொற்று சம்பவங்கள் பதிவானபோதும் ஒமிக்ரோன் திரிபு பற்றி உறுதி செய்யப்படவில்லை. சீனாவின் தெற்கில் வெளிநாட்டு பயணிகளிடையே குறைந்த எண்ணிக்கையான ஒமிக்ரோன் திரிபு சம்பவங்களே பதிவாகியுள்ளன.

தேசிய அளவில் சீனாவில் திங்கட்கிழமை 182 தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. முந்தைய தினத்தில் 162 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக நான்காவது நாளாக அங்கு நோய்த் தொற்றின் அதிகரிப்பை காட்டுவதாக உள்ளது.

Wed, 12/29/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை